இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்துவரும் நிலையில் அங்கு சிக்கி இருந்த இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் பேசிய போது, “ஐந்து சிறப்பு விமானங்கள் மூலம் இஸ்ரேலில் இருந்து 1200 இந்தியர்கள் மீட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த மோதல் விவகாரத்தில் பாலஸ்தீன மக்களுக்காகவும் அகதிகளுக்காகவும் ஐநா சபை மூலமாக இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒன்றாக நிற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.