நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட்கள் வாங்குவதற்காக மத்திய அரசு  பி எம் கிஷான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ரூபாய் மூன்று  தவணையாக ரூ.2000 வீதம் மொத்தம் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு 6000 என்ற தொகை பற்றாக்குறையாக இருப்பதாகவும் இதனை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வருடாந்திர தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.