ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. நிலையில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின் பினாமி விளம்பரங்கள் உள்ளிட்ட விளம்பர இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஆன்லைன் பார்வையாளர்கள் இந்த பெட்டிங் மற்றும் சூதாட்ட விளையாட்டுகளின் விளையாடத் தூண்டும் விளம்பரங்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தவில்லை.

இந்த விளம்பரங்களால் பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதனால் ஊடக நிறுவனங்கள், ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்த விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். சூதாட்ட இணையதளங்கள் குறித்த விளம்பரங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. இந்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.