எந்த ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் அவசியம் . அவ்வாறு ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் வாகன போட்டிகள் அபராதம் செலுத்த நேரிடும். ஓட்டுனர் உரிமத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.  அதேசமயம் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியம். இந்த செயல் முறையை நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடலாம்.

அதற்கு முதலில் parivahan.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று driving licence சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் என்ற பக்கத்தில் உங்களது விவரங்களை பதிவிட்டு ஆம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் விவரங்களை உள்ளிட்டு கேப்சாவை சமர்ப்பித்தால் விண்ணப்ப ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும்.

அதன் பிறகு டிரைவிங் லைசென்ஸ் அப்டேட் செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் பழைய டிரைவிங் லைசன்ஸ் பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தினால் புது டிரைவிங் லைசன்ஸ் உங்களுக்கு கிடைக்கும்.