மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பானது யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

வாடகை வீட்டில் வசிப்போர் வாடகைதாரர் பிரிவில் தங்களுடைய ஆதார் இணைத்துக் கொள்ளலாம். உரிமையாளராக இருந்து பிறகு மின் இணைப்பு எண்ணில் பெயர் மாற்றாவிட்டால் அதற்கான பிரிவையும், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அதற்கான பிரிவை தேர்வு செய்து ஆதாரை இணைத்துக் கொள்ளலாம். ஆதாரை இணைப்பதற்கு இந்த மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் சில இடங்களில் உரிமையாளர் வாடகைதாரருக்கு தெரியாமலேயே ஆதார் எண்ணை இணைத்ததாக புகார் எழுந்துள்ளது. எனவே ஆதார் இணைப்பில் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். தகுதியானவர்களுடைய ஆதார் மட்டுமே இனைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.