ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இதைச் செய்யத் தவறவிட்டால் பான் கார்டுகள் ரத்து செய்யப்படுவதோடு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் தாமதக் கட்டணமாக ரூ.1000 செலுத்த நேரிடும்.  மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் உங்களுடைய பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.