வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் முகவரி மற்றும் அடையாள சான்றை வழங்க வேண்டும். ஆனால் எப்பொழுது ஆதார் அட்டை மூலமாகவே தனிநபர் கடனை எளிதாக பெற்று விடலாம். வங்கியில் இப்போது ஆதார் கார்டு வைத்து கடன் கொடுக்கிறது. இதை வைத்து கடன் வாங்கும் செயல் வரை மிகவும் ஈஸியானது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி போன்ற பல முன்னணி வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஆதார் மூலமாக கடனை பெறலாம். இதனுடன் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும்  சரிபார்க்க வேண்டும். அதாவது கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு மூலம் இரண்டு லட்சம் வரை கடன் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதுவும் கடனுக்கான விண்ணப்பம் வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாக கடன் தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஆதார் அட்டை பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும். வங்கியின் செல்போன் நம்பர் பயன்படுத்தி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பொழுது செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு தனி நபர் கடன் விவரத்தை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு பான் கார்டு விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதன்பிறகு தகவல்கள் அனைத்தும் வங்கியால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு முடிந்த பிறகு கடன் அங்கீகரிக்கப்பட்டால் கடன் தொகை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.