இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதாவது வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பதை இன்றியமையாத ஆவணமாக உள்ளது. அதே சமயம் குடிமகனின் பிறந்த தேதி மற்றும் முகவரி சரி பார்ப்பதற்கு ஆதார் கார்டு பெறப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பிறகு ஆதார் கார்டு மூலம் இந்திய குடிமக்களின் பிறந்த தேதி மற்றும் முகவரியை சரி பார்க்க முடியாது.

அதேசமயம் எந்த நிறுவனங்களிலும் இனி பிறந்த தேதி மற்றும் முகவரியை சரிபார்ப்புக்காக ஆதார் கார்டு ஒப்படைத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கட்டாயமாக பிறந்த தேதிக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மதிப்பெண் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். அதனைப் போலவே முகவரி சான்று குடியுரிமை சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.