ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டைகளில் தனி மனிதனின் அனைத்து விதமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற அடையாள ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் கார்டின் மூலமாக ஒரு நபரின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்து கொள்ள முடியும். இந்த நிலையில்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்.30க்குள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி (அ) அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆதாரை இணைக்க 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.