இந்தியாவின் முதல் VVIP மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து பராமரித்துவருகிறது.   பீப்பல் எனப்படும் இந்த மரமானது மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இந்த மரத்தின் பாதுகாப்பிற்காக, 24 மணி நேரமும் 4 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மரத்தில் இருந்து ஒரு இலை கூட காய்ந்துவிடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

வேளாண் துறை அலுவலர்கள் வாரந்தோறும் பாதுகாத்து வருகின்றனர். இந்த மரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால், அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினால் அந்த நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்று ஒன்றிலிருந்து பீப்பல் மரம் நடப்பட்டது. இது, கௌதம புத்தர் ஞானம் அடைந்ததாகச் சொன்ன அதே போதி மரத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. எந்தவொரு பண்டிகை விடுமுறை இருந்தாலும் இந்த மரத்தின் பராமரிப்புக்கு விடுமுறை இல்லை,என்று மரத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர் கூறியுள்ளார்.