
திரை உலகில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 45 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா த்ரிஷா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
Swasika #Retro vibes🤩💫💥#suriya #KarthikSubbaraj #swasika pic.twitter.com/XEEb0CPCu9
— Heisenberg💎 (@supes616) April 7, 2025
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சுவாசிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது கன்னிமா பாடலுக்கு நடனமாடிய விடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.