ஆடுகள் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.

இந்நிலையில் ஆடுகளால் மனிதர்களின் குரலை மட்டுமே வைத்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு விதமான உணர்வுகள் அடங்கிய ஒலி மாதிரிகளை கொண்டு ஆடுகளிடம் ஒலிக்க வைத்தபோது, அவற்றின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  எதிர்மறையான ஒலிகள் ஆடுகளுக்குள் பயத்தை ஏற்படுத்தும் எனவும், நேர்மறையான ஒலிகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.