ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் அதிகமான கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இதனை சமாளிக்க அழகா்கோவில், அணைப்பட்டி உள்ளிட்ட கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (திண்டுக்கல் மண்டலம்) சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆடி அமாவாசை இன்று  மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய 2 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முக்கிய கோயில்களான அழகா்கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ஆத்தூா் சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தேனி உப்புத்துறை மாளிகைப் பாறை கருப்பசாமி கோயில், ராஜபாளையம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், குச்சனூா் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.