இந்தியாவில் 2012 ஆம் வருடம் முதல் தான் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நியமனமுறை அமலுக்கு வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் முதல்முறையாக 2012 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012-ம் வருடம் வெளியிடப்பட்டது. ஆனால் 2012 நவம்பர் 16ஆம் தேதி தான் ஆசிரியர் தகுதி தேர்வு முறை கட்டாயம் என்று நிபந்தனை வந்தது. இதற்கு முன்னதாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வு வெற்றி பெற்றால் தான் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்று அரசு உத்தரவிட்டது.

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் நவம்பர் 16 2012 முன்னதாக பணியமனம் செய்யப்பட்ட தொடக்கக்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதலோடு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இந்த உத்தரவின் மூலம் ஆசிரியர்களுடைய வாழ்வாதாரம் காக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் வலியுறுத்தியுள்ளது .இது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.