தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

இந்தத் தொகை ஆகஸ்ட் 15 முதல் 20ஆம் தேதிக்குள் பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 2000 ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இந்த 2000 ரூபாய் உதவி தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.30 கோடி குடும்ப தலைவிகள் பயன்பெற உள்ளனர். தமிழகத்திலும் தற்போது குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.