விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக இருந்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கியவர் தான் சிவாங்கி. இவர் ஆரம்பகட்டத்தில் ஹோம்லியான உடைகளில் தான்  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்ஸ்டாவிலும் அதே விதமான புகைப்படங்களை தான் வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் இவர் வெளிநாட்டிற்கு டிரிப் சென்றபோது அங்கு ஷார்ட்  உடையில் வளம் வந்தார். இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஷார்ட் உடையில் போட்டோ வெளியிடுவது பட வாய்ப்புக்காக என்று பலரும் விமர்சனம் செய்திருந்தது குறித்து பேட்டி ஒன்றில் சிவாங்கி பேசி உள்ளார்.

அதாவது அவுத்து போட்டு காட்டினால் மட்டும் பட வாய்ப்பு கிடைத்து விடுமா? எனக்கு புரியவில்லை. என்ன லாஜிக் இது. அவுத்து போடும் எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா? என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு ஆத்திரமாக வருவது. நான் எப்போதும் டைட்டான உடைகளை போட மாட்டேன். நான் குண்டாக தெரிவதால் அப்படி இருந்தேன். ஆனால் ஷார்ட் போட்டு  பார்த்தபோது அது எனக்கு சரியாக இருந்தது. நான் என் மகிழ்ச்சிக்காக தான் அப்படி செய்தேன். பட வாய்ப்புக்காக செய்யவில்லை. உடைமாற்றினால் கேரக்டர் மாறிவிடும் என்று சொல்கிறார்கள். அப்படி இல்லை.  காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.