நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையின் போது துர்கை அம்மனுக்கு 9 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சமீபத்தில் தான் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த இந்த சம்பவத்திற்கு தற்போது கண்டனம் தெரிவிக்கும் விதமாக துர்கா தேவி வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்வது போன்றும் காலடியில் பெண் மருத்துவர் கிடப்பது போன்றும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவமானம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சிலைக்கு முன்பாக வெள்ளைத்துணியால் பெண் மருத்துவர் மூடப்பட்டு கிடப்பது போன்று அருகில் மருத்துவர் உடை தொங்குவது போன்றும் இருக்கிறது. மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.