
மூடுபனி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். அதன்பிறகு பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு சமயம் மலேசியாவில் இருந்து விமானத்தில் திரும்பும்போது 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய மகனோடு விமானத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அந்த பெண் ரசிகை பேசிக்கொண்டு வர அருகில் இருந்து மகன் அம்மாவிடம் அம்மா அதை காட்டுங்கள் என்று கூறினார் .உடனே அந்த பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து அதிலிருந்த லாக்கெட்டை திறந்து காண்பித்தார் .அதில் என்னுடைய படம் இருந்தது. அதைப்பற்றி அந்த பெண் கூறும்போது திருமணமான புதிதில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதை என் கணவரிடம் நான் காட்டினேன். சரி வைத்துக் கொள் என்று கூறினார். அதனால் சாகும் வரை உங்களை என் தாலியிலேயே வைத்திருக்கிறேன் என்று கூறினார் .இப்படிப்பட்ட கணவரை தான் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட ரசிகர் இருப்பதால் தான் இன்னமும் சினிமாவில் என்னால் நிலைத்திருக்க முடிகிறது என்று கூறினார்.