ர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினிநிறுவனத்தின் புரூக்ஃபீல்டு கேம்பஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான காப்பகத்தில், பிஞ்சுத் குழந்தைகளை கொடூரமாகத் தாக்கி, மிரட்டி, சித்திரவதை செய்ததாக ஐந்து பெண் ஊழியர்கள் மீது பெங்களூரு போலீஸார் அதிரடியாகக் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்  மிகப்பெரிய புயலையும் மெகா அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் சட்டப்பூர்வ அதிகாரி திலகேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 29 அன்று எச்ஏஎல் (HAL) காவல் நிலையத்தில் இந்த எஃப்ஐஆர் (FIR) அதிரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா விபரீத வழக்கில் மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து காப்பக ஊழியர்கள் அக்மார்க்காகக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகாரி திலகேஷ் குமாருக்கு வாட்ஸ்அப்பில் (WhatsApp) வந்த சில அதிர்ச்சி வீடியோக்களில், காப்பகத்தில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் பயங்கரமாக அழுது கொண்டிருப்பதும், அவர்களுக்கு அங்கே அராஜகமான முறையில் சித்திரவதை நடப்பதும் தெரிந்ததை அடுத்து அவர் உடனடியாகப் போலீஸாரை அணுகியுள்ளார்.

கடந்த ஜூன் 25 அன்று இந்த காப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக அந்தப் பெண் ஊழியர்கள் குழந்தைகளை அடித்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மெகா அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அழுகும் குழந்தைகளை மிரட்டுவதற்காக அவர்களை ஓடும் வாஷிங் மெஷினுக்குள் (Washing machine) பூட்டி வைப்பது, தண்ணீர் நிரம்பிய குறுகிய பைப்லைன்களுக்குள் கட்டாயப்படுத்தித் தள்ளுவது மற்றும் பாத்ரூம்களுக்குள் அடைத்து வைத்துப் பூட்டுவது போன்ற நெஞ்சைப் பதற வைக்கும் அராஜகங்களை அந்த ஊழியர்கள் செய்ததாகக் புகாரில் மிகக் கொடூரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது வேலை நேரத்தின் போது கேப்ஜெமினி ஐடி ஊழியர்கள் தங்களது குழந்தைகளை நம்பி விட்டுச் செல்லும் இந்த மையத்தில் நடந்த கொடூரத்தைக் கண்டு பெற்றோர்களும் அதிகாரிகளும் மெகா அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து ஒயிட்ஃபீல்டு பிரிவு டிசிபி சைதுலு  கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த அவலச் செய்தி சோசியல் மீடியா ஏரியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி, “பெற்றோர்கள் நம்பி விட்டுட்டுப் போனா இப்படித்தான்  அராஜகம் பண்றதா?! பிஞ்சு குழந்தைககிட்ட இப்படி மிருகத்தனமா நடந்துகிட்ட அந்த 5 பேருக்கும் போலிஸ் இரக்கமே இல்லாம கடுமையான மெகா தண்டனை வாங்கித் தரணும்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் அள்ளிக்கொட்டும் கொந்தளிப்பான கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக விவாதிக்கப்பட்டு வருகிறது.