
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று அரை நிர்வாண கோலத்தில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்றதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் ஆண் நண்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.