தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண், காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்ய உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இதில் 50 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விபத்துக்கள் நடைபெறுவது பெருமளவில் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.