தெலுங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு கொள்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நேரங்களில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட், சாதாரண உடைகள், ஷார்ட்ஸ், ஒரு துண்டு ஆடைகள், செருப்புகள் மற்றும் கிளாக்ஸ் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் கருப்பு தோல் காலணிகளுடன் சட்டை மற்றும் கால் சட்டை கொண்ட முறையான ஆடையை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாணவிகள் குர்திகள் மற்றும் சல்வார் கமீஸ் அணிய வேண்டும் எனவும் துப்பட்டாவை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாணவிகள் டைட்ஸ் மற்றும் லீவ்லெஸ் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.