தமிழகத்தில் பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு என்று அழைக்கப்படும் எமிஸ் என்ற தளத்தை ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல் கல்வி சாரா மற்ற செயல்பாடுகளின் அனைத்து விவரங்களையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பள்ளி அளவில் நடந்த போட்டிகள் மற்றும் வட்டார அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் விவரங்கள் அனைத்தையும் எமிஸ் தலத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் செப்டம்பர் மாதம் பள்ளி அளவில் மன்ற நிகழ்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நாள் அக்டோபர் 13 எனவும் இந்த விவரங்களை எமிஸ் தலத்தில் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எமிஸ் தலத்தில் பள்ளி அளவிலான விவரங்களை பதிவேற்றம் செய்தவுடன் மாற்றம் செய்ய முடியாது எனவும் எந்தவித தவறும் இல்லாமல் சரியாக ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.