இந்தியாவில் பல மாநிலங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 8.4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதாவது அரசு தொடக்கப் பள்ளிகளில் 7.2 லட்சம் ஆசிரியர் காலி பணியிடங்களும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.2 லட்சம் ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதனால் பள்ளிகளில் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மத்திய அமைச்சகம் மாநில கல்வி வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.