நாட்டிலுள்ள நலிவடைந்த விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 15 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்  இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளி வந்துள்ளது.

அதாவது இந்த திட்டத்தில் உங்களுடைய பெயர் பட்டியலிடப்பட்டிருந்தால் நீங்கள் உடனடியாக ஒரு வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. அதாவது இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு இ கேஒய்சி விவரங்களை சரிபார்ப்பு செய்ய வேண்டும். அது தவிர விவசாயிகள் நிலத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வேலையை முடிக்க விட்டால் நிதி உதவி கிடைக்காது. பட்டியலில் இருந்து உங்களுடைய பெயர் நீக்கப்படலாம்.