தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கலாய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல் பஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அந்த மாவட்டங்களை சேர்ந்த ஆட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர், மக்களுக்கான திட்டங்கள் அவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். ஆனால் இது போதாது இன்னும் நிர்வாகம் மேம்பட வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உண்டு. இதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்