பல உதவிகள் கோரி அரசு அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்கள் காரணமாக மாற்றுக் திறனாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். அப்போது அவர்களை அவமதிக்கும் விதமாக மாற்றுத்திறனாளி அலுவலர்கள் யாரேனும் எந்த செயலையும் செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. எனவே அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக அலுவலர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்று அந்த சுற்றறிக்யில் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்துள்ளார்.