
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த ஆண்டிற்கான மாணவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளியின் சார்பாக சாலை ஓரத்தில் கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்… QR- Code ஐ ஸ்கேன் பண்ணுங்க வீட்டில் இருந்தே உங்கள் குழந்தைகளை நம்ம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருப்புட்குழியில் சேர்த்திடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.