தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி “தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு” என்ற தலைப்பில் நிறுவனத்தோடு இணைந்து சென்னை சிறுசேரியில் 2 நாட்கள் பயிற்சி ஏற்பாடுகளை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர, பள்ளி மாணவர்களுடைய கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான AI  இணைத்து எப்படி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

அறிவு பொருளாதாரத்தை நோக்கி செல்வதன் மூலமாக தமிழ்நாடு உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும், இந்த திட்டமானது தொடர்ந்து திருச்சி, கோவை, மதுரை, சென்னையில் புறநகர் பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் விதமாக விரிவுபடுத்த உள்ளது. பள்ளிக்கல்வி உருமாற்றமும் வழி நடத்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.