மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்   அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட வசதியாக பக்தர்களுக்காக ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் இயக்கம் ஜனவரி 19 முதல் தொடங்கும். இந்த சிறப்பு ரயில்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்மு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படுகின்றன.