டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் டெல்லி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாஜக அரசு சார்பில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில்  மழைநீர் ஒழுகுகிறது அதை வாளி வைத்து பிடிப்பது போலவும் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.