
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் தன் தாயாருக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பேர் காரில் வந்தனர். இவர்கள் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமியை காரில் கடத்தி சென்றனர். பின்னர் அந்த சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவர்கள் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனை அவர்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெருள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .