தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாஜக. கைது நடவடிக்கைகள் வாயிலாக பாஜகவால் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.