இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுடைய வேலை, மருத்துவம், குடும்பத்தினரோடு வசிக்க, சுற்றுலா, வர்த்தகம் என பல தேவைகளுக்காக அங்கே செல்கிறார்கள். விசா வசதியை இந்தியாவில் உள்ள தூதரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் விசா வழங்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 2023 ஆம் வருடம் வரலாறு காணாத அளவிற்கு விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 2022ஐ காட்டிலும் 60% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக புதிய ஆட்களையும் நியமனம் செய்தது, நடைமுறைகளில் முன்னேற்றம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  முன்பு பார்வையாளர்கள் விசா பெறுவதற்கு அப்பாயிண்ட்மெண்ட் காத்திருப்பு நேரம் ஆயிரம் நாட்களாக இருந்தது. தற்போது 250 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற விசா வகையினருக்கும் காத்திருப்பு நேரம் மிகவும் குறைவாக மாறி இருக்கிறது.