பிரான்சில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கவலைகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாரீஸ் நகரில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். பின்னர், மோனாலிசா ஓவியத்தை பாதுகாக்க பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது சூப்பை ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

“எங்கள் விவசாயத் துறை பரிதாபமாக உள்ளது. எங்கள் விவசாயிகள் உயிரிழக்கிறார்கள்” என கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு காரணமான இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.