நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய மக்களவையில் தான் பேசியது தவறு என்று அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதனால் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி அவர்கள் நீல நிற சட்டையில் மக்களவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.