தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்  மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும், யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டார்கள். இதற்கு 100% முதலமைச்சர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார். மேலும் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த பிறகு தான் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதனைப்போலவே விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000 வழங்க முடியாது, தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் தான் வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.