தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நிதி பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் மட்டும் தான் வழங்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் ரொக்க பணம் வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, பொங்கல் பரிசு தொகை எதற்கு வழங்கவில்லை என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வரைக்கும் கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகப்பாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். அப்படி பார்க்கும்போது இன்றைய மதிப்பிற்கு ‌ரூ.30,000 வருகிறது. மேலும் இதனால் பொங்கல் பரிசு தொகுப்பாக இந்த அரசு முப்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.