தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட  பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதாக கூறப்பட்டது‌. அதாவது ஜெய்லர் படத்தில் நடிகை தமன்னா காவலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இதனால் கூலி படத்திலும் அது போன்று ஒரு குத்தாட்டம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று அந்த போஸ்டரை வெளியிட்டு இன்று அப்டேட் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் தற்போது கூலி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே நடனம் ஆடுவதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.