சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் வந்து தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். மதுபோதையில் தன்னையும் தனது தாயையும் தந்தை அடித்து துன்புறுத்துவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவி புகார் அளித்துள்ளார்.

அந்த சிறுமி அழுது கொண்டு தினமும் எங்க அப்பா ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்றாரு. வேலைக்கு போக சொல்றாரு. என்னை எங்க அம்மாவை அடிச்சு துன்புறுத்துகிறார். எங்க அக்கா ஸ்கூலுக்கு போறதில்ல. அக்கா வேலைக்கு தான் போகிறாள். என்னையும் இப்போ ஸ்கூலுக்கு போக கூடாதுன்னு சொல்றாரு என மாணவி கண்ணீருடன் பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.