
இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீரதீரசூரன். இது விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை பட குழு உறுதி செய்துள்ளது. படம் நேற்று முன்தினம் வெளியாகியது. படம் வெளியாகி முதல் நாளில் 3.25 கோடி வசூலித்துள்ளது.
View this post on Instagram
இதுவரை 27 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. கடந்த 10 வருடங்களில் வெளியான விக்ரம் படங்களிலேயே இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு விக்ரமுக்கு திருப்புமுனையாகவும் அமைந்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நடிகரும் விக்கிரமமும் மகனுமான விக்ரம் தன்னுடைய தந்தையிடம் பழைய புகைப்படத்தை பகிர்ந்து ” வின்டேஜ் சியான் வீரதீர சூரனுக்கு நன்றி.. அருண்குமார் சார்” என்று பதிவிட்டுள்ளார் .விக்ரம் துருவ் விக்ரம் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.