பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என்று அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார்.

இவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பை விதைக்கும் விதத்தில் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.