அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பிராண்டட் மருந்துகளுக்கு செல்லக்கூடாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம்(NMC) தெரிவித்துள்ளது. தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் சில காலம் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராண்டட் மருந்துகளை விட ஜெனரிக் மருந்துகள் 30-80% மலிவானது என்பதால் நோயாளிகளின் செலவு குறைகிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட NMC விதிமுறைகளின்படி மருந்துகளுக்கான இந்தியாவின் பாக்கெட் செலவினம் சுகாதாரத்திற்கான பொதுச் செலவில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.