தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீவிரமடைந்து வரும் பருவ மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்தது. இதனால் டெல்லி செங்கோட்டைஉள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனைத் தவிர வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும் என்றும் பள்ளி குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.