தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “சென்ற நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலையுயர்ந்த போதைப்பொருள் பிடிபட்டதாக கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

அவை சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலை என்ன..? என்பது குறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும்” என்று பேசினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரையிலும் இந்த ஆட்சி ஒரு புது வரலாற்றை படைத்துள்ளது. தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா நடத்தப்பட்டது.

இந்த ஆட்சியில் நடத்தப்பட்டது போன்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பத்தாண்டு கால உங்களுடைய ஆட்சியில் நடத்தப்படவே இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் நோய் போன்று வளர்ந்து வந்தது. அ.தி.மு.க ஆட்சியில் போதைப் பொருட்களை தடுக்காததால் தற்போது நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி உள்ளோம்” என்று முதல்வர் கூறினார்.