
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தில் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி மற்றும் முத்த காட்சிகள் போன்றவைகள் சர்வ சாதாரணம்.
இந்நிலையில் பாலிவுட் பட வாய்ப்பை பிடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். அவர் முத்த காட்சியில் நடிக்க ஓகே சொன்ன பிறகு தான் அவரை படத்தில் கமிட் பண்ணதாக கூறப்படுகிறது. மேலும் கவர்ச்சி வேடங்கள் மற்றும் முத்த காட்சி போன்றவைகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறிவந்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.