
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, “இத்தனை வருடங்களில் ஹிந்தி படங்களிலிருந்து எனக்கு வாய்ப்பு எதுவுமே வரவில்லை. 27 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்தியாவில் மட்டுமே வொர்க் செய்தேன். என்னுடைய முதல் படமே ஹிந்தி படம்தான்.
அது தியேட்டர்களில் சரியாக ஓடவில்லை. தென்னிந்திய சினிமாக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தான் நான் எனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன். என்னுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது. ஹிந்தி படங்களை நான் தவிர்த்தது இல்லை. இத்தனை வருடங்களாக எனக்கு ஏற்ற கதைகள் எதுவும் அமையவில்லை என்பதுதான் உண்மை எனத் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.