
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த ஜெய்சங்கர் அவர்களின் மகன் சஞ்சய் சங்கர், தனது தந்தையைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். “எங்கள் அப்பா செய்த புண்ணியம் தான் இன்றைக்கு நாங்கள் நன்றாக இருக்கிறோம். என்றைக்கும் அவர் பணத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. அவர் பெயரை இன்றுவரையும் நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்” என்று சஞ்சய் சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜெய்சங்கர், தன்னுடைய குடும்பத்தையும், குறிப்பாக தனது பிள்ளைகளையும் மிகவும் நேசித்தவர். தந்தையின் அந்த அன்பை மனதில் கொண்டு, தனது தந்தையின் பெயரை எப்போதும் உயர்த்தும் வகையில் செயல்பட்டு வருவதாக சஞ்சய் சங்கர் தெரிவித்துள்ளார்
.