விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தமிழகத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முறை நடவடிக்கை எடுத்தும் இன்னும் பல இடங்களில் கட்டணம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆம்னி பேருந்துகளுக்கு என்று மத்திய மாநில அரசுகளின் மோட்டார் வாகன விதிகள் படியான கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இருப்பினும் பயணிகள் நலன் கருதி அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து வருவதாகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் கண்காணிக்கப்பட்டு அது குறித்து அரசுக்கு  தெரிவிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஆம்னி பேருந்து  கட்டண விவகாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு 9043379664 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.