இந்தியாவில் மட்டும் தான் பாதாள  சாக்கடையை மனிதர்களே அள்ளும் நிலை இருக்கிறது. மேலும் நாட்டில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டு ஊனமுற்றால் அவர்களுக்கு இழப்பீடு 20 லட்சம் வழங்க வேண்டும்.

அதேபோல சாக்கடையை சுத்தம் செய்யும் பொழுது இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மத்திய மாநில அரசுகள் கையால் சாக்கடைகளை சுத்தம் செய்வதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் அதிகாரிகள் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.